Indian Air Force Recruitment 2024: மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய விமானப் படையில் (IAF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. Flying Branch, Ground Duty (Technical) Branch, Ground Duty (Non-Technical) Branches, NCC Special Entry (Flying) என மொத்தம் 304 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பெற நீங்கள் ஆர்வமாக இருந்தால், கவனமாக படியுங்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
Indian Air Force Recruitment 2024 Overview
தகவல் | விவரம் |
---|---|
துறையின் பெயர் | இந்திய விமானப்படை |
வேலை வகை | மத்திய அரசு வேலைகள் |
மொத்த காலியிடங்கள் | 304 |
பணி செய்யும் இடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்க
தொடங்கும் நாள் |
30.05.2024 |
விண்ணப்பிக்க
கடைசி நாள் |
28.06.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அதிகாரப்பூர்வ
இணையதளம் |
https://afcat.cdac.in/AFCAT/ |
பணியிடங்கள் விவரம்:
- Flying Branch – 38 பணியிடங்கள்
- Ground Duty (Technical) Branch – 156 பணியிடங்கள்
- Ground Duty (Non-Technical) Branches – 119 பணியிடங்கள்
- NCC Special Entry (Flying)
கல்வி தகுதி:
பிரிவு | குறைந்தபட்ச கல்வித் தகுதி |
---|---|
பறக்கும் பிரிவு | இளநிலை பட்டம் அல்லது பி.இ / பி.டெக் பட்டம் அல்லது அமி (இந்தியா) அல்லது ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா உறுப்பினர் |
நிலப்பணி (தொழில்நுட்ப) பிரிவு | இன்ஜினியரிங் / தொழில்நுட்ப பட்டம் அல்லது அமி (இந்தியா) அல்லது ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா உறுப்பினர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை அமைப்பின் பட்டதார உறுப்பினர் |
நிலப்பணி (தொழில்நுட்ப அல்லாத) பிரிவுகள் | இளநிலை பட்டம் அல்லது பி.இ / பி.டெக் பட்டம் |
நிர்வாகம் & களப்பணி | இளநிலை பட்டம் |
கணக்கு பிரிவு | பி.காம், பி.பி.ஏ, சி.ஏ / சி.எம்.ஏ / சி.எஸ் / சி.எஃப்.ஏ, நிதி துறையில் பி.எஸ்சி |
கல்வி பிரிவு | முதுநிலை பட்டம் |
வானிலை அறிவியல் பிரிவு | பி.எஸ்சி (இயற்பியல் & கணிதம்) அல்லது இன்ஜினியரிங் / தொழில்நுட்ப பட்டம் |
கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை Flying Branch AFCAT and NCC Special Entry பணிகளுக்கு 20 வயது பூர்த்தியானவர்களும் 24 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். Ground Duty (Technical & Non-Technical) Branch பணிகளுக்கு 20 வயது பூர்த்தியானவர்களும் 26 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம்:
இந்திய விமானப்படையில் சம்பளத்தை பொறுத்தவரை பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும். குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சமாக ரூ.1,77,500/- வரை சம்பளம் கிடைக்கும். பதவி உயரும்போது சம்பளமும் அதிகரிக்கும். உதாரணமாக, பறக்கும் அதிகாரி நிலையில் சம்பளம் ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை இருக்கும். விங் கமாண்டர் நிலைக்கு செல்லும்போது, சம்பள வரம்பு ரூ.1,21,200/- முதல் ரூ.2,12,400/- வரை உயரும். இது தவிர, இந்திய விமானப்படை அதிகாரிகளுக்கு வீட்டு வசதி, போக்குவரத்து, மருத்துவக் காப்பீடு போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
தேர்வு செயல்முறை:
இந்திய விமானப்படையில் சேர்வதற்கு பல கட்ட தேர்வு செயல்முறை உள்ளது. முதலில் ஆன்லைன் தேர்வில் (Online Exam) தேர்ச்சி பெற வேண்டும். அதைத் தொடர்ந்து AFSB நேர்காணல் (AFSB Interview) இருக்கும். இறுதியாக மருத்துவ பரிசோதனை மற்றும் உடல் தகுதி சோதனை (Practice Test) மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.550 + GST செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?:
இந்திய விமானப்படையில் சேர ஆர்வமுள்ளவர்கள் AFCAT தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். https://afcat.cdac.in/afcatreg/candidate/login என்ற இணையதளத்திற்கு சென்று புதிய கணக்கு உருவாக்கி விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து கட்டணத்தை செலுத்திய பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு அறிவிப்பை கவனமாக படித்து தகுதி வரம்புகளை உறுதி செய்து கொள்வது அவசியம்.
முக்கிய இணைப்புகள் (Important Links):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்பப் படிவம்: | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிப்பதற்கு தொடங்கும் நாள்: 30.05.2024
- விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள்: 28.06.2024