10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு BSF எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.81,100/- வரை! BSF Recruitment 2024 

BSF Recruitment 2024: எல்லை பாதுகாப்பு படை (BSF) துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 162 SI (Master), SI (Engine Driver), HC (Master), HC (Engine Driver), HC (Workshop) & Constable (Crew) Posts என மொத்தம் 162 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அரிய வாய்ப்பைப் பெற நீங்கள் ஆர்வமாக இருந்தால், கவனமாக படியுங்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

BSF Recruitment 2024
BSF Recruitment 2024

BSF Recruitment 2024 Overview

தகவல்விவரம்
துறையின் பெயர்Border Security Force
எல்லை பாதுகாப்பு படை
வேலை வகைமத்திய அரசு வேலைகள்
மொத்த காலியிடங்கள்162
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க
தொடங்கும் நாள்
02.06.2024
விண்ணப்பிக்க
கடைசி நாள்
01.07.2024
விண்ணப்பிக்கும்
முறை
ஆன்லைன்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://rectt.bsf.gov.in/

பணியிடங்கள் விவரம்:

  • SI (Master) – 07 பணியிடங்கள்
  • SI (Engine Driver) – 04 பணியிடங்கள்
  • HC (Master) – 35 பணியிடங்கள்
  • HC (Engine Driver) – 57 பணியிடங்கள்
  • HC (Workshop) – 13 பணியிடங்கள்
  • Constable (Crew) – 46 பணியிடங்கள்

கல்வி தகுதி:

1. தலைமைக்கப்பல் ஓட்டுநர் (SI):

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்
  • மத்திய / மாநில உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து துறை / வணிக கடல் துறை வழங்கிய 2nd class தலைமைக்கப்பல் ஓட்டுநர் சான்றிதழ் வைத்து இருக்க வேண்டும்

2. இயந்திர ஓட்டுநர் (SI):

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்
  • மத்திய / மாநில உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து துறை / வணிக கடல் துறை வழங்கிய 1st class இயந்திர ஓட்டுநர் சான்றிதழ் வைத்து இருக்க வேண்டும்

3. தலைமை மாலுமி (HC):

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்
  • செரங்கு சான்றிதழ் வைத்து இருக்க வேண்டும்

4. இயந்திர ஓட்டுநர் (HC):

  • 10ஆம் வகுப்புக்கு (அல்லது அதற்கு சமமான தேர்ச்சி)
  • 2nd class இயந்திர ஓட்டுநர் சான்றிதழ் வைத்து இருக்க வேண்டும்

5. பணிமனை பணியாளர் (HC):

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்
  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்படும் மோட்டார் மெக்கானிக் (டீசல்/பெட்ரோல் இயந்திரம்), மின்சார தொழில்நுட்ப வல்லுநர், ஏசி பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர், மின்னணுவியல், இயந்திர தொழில்நுட்ப வல்லுநர், தச்சு தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் (plumbing) படிப்புகளில் டிப்ளோமா தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்

6. காவலாளி (கப்பல் பணியாளர்):

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்
  • 265 ஹெச்.பி.க்கு கீழ் உள்ள படகுகளை இயக்குவதில் ஒரு வருட அனுபவம் வேண்டும்
  • ஆழ்கடலில் உதவி இல்லாமல் நீந்த திறன் கொண்டவராக இருக்க வேண்டும்

கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

  • SI (Master): 22 முதல் 28 வயது வரை.
  • SI (Engine Driver): 22 முதல் 28 வயது வரை.
  • HC (Master): 20 முதல் 25 வயது வரை.
  • HC (Engine Driver): 20 முதல் 25 வயது வரை.
  • HC (Workshop): 20 முதல் 25 வயது வரை.
  • Constable (Crew): 20 முதல் 25 வயது வரை.

வயது வரம்பு தளர்வு:

மேற்குறிப்பிட்ட வயது வரம்பு பின்வரும் பிரிவினருக்கு தளர்வுபடுத்தப்படும்:

  • SC/ST பிரிவினர்: 5 ஆண்டுகள்
  • OBC பிரிவினர்: 3 ஆண்டுகள்

சம்பளம்:

எல்லை பாதுகாப்பு படை (BSF) வேலைவாய்ப்பு 2024 பணிக்கு சம்பளத்தை பொறுத்தவரை பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

  • SI (Master): ரூ.35000 -112400/- (நிலை – 6)
  • SI (Engine Driver): ரூ.35000 -112400/- (நிலை – 6)
  • HC (Master): ரூ.25500 -81100/- (நிலை – 4)
  • HC (Engine Driver): ரூ.25500 -81100/- (நிலை – 4)
  • HC (Workshop): ரூ.25500 -81100/- (நிலை – 4)
  • Constable (Crew): ரூ.21700 – 69100/- (நிலை – 3)

தேர்வு செயல்முறை:

திறமையான மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்க, Border Security Force கடுமையான தேர்வு முறையை பின்பற்றுகிறது. விண்ணப்பதாரர்கள் Written Exam, Physical Standards Test (PST), Physical Efficiency Test (PET), Document Verification, Practical Test & Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்ப கட்டணம்:

SI (Master), SI (Engine Driver)

  • (SC/ST)/முன்னாள் ராணுவ வீரர் – கட்டணம் இல்லை
  • பிற பிரிவினர் – ரூ.247.20/-
  • செலுத்தும் முறை: ஆன்லைன் மூலம்

HC (Master), HC (Engine Driver), HC (Workshop), Constable (Crew)

  • SC/ST /முன்னாள் ராணுவ வீரர் – கட்டணம் இல்லை
  • பிற பிரிவினர் – ரூ.147.20/-
  • செலுத்தும் முறை: ஆன்லைன் மூலம்

விண்ணப்பிப்பது எப்படி?:

எல்லை பாதுகாப்பு படை (BSF) வேலைவாய்ப்பு 2024 பணிக்கு சேர ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து கட்டணத்தை செலுத்திய பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணைப்பு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF இணைப்பு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது தேர்வு அறிவிப்பை கவனமாக படித்து தகுதி வரம்புகளை உறுதி செய்து கொள்வது அவசியம்.

முக்கிய இணைப்புகள் (Important Links):

 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிப்பதற்கு தொடங்கும் நாள்: 02.06.2024
  • விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள்: 01.07.2024

Leave a Comment